இன்று (15) காலை ஹாலிஎல உடுவர பிரதேசத்தில் நேப்பியர் வீதியில் பாரிய மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதால் குறித்த வீதியின் போக்குவரத்து முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
தற்போது பெய்து வரும் தொடர் மழையால் நேப்பியர் சாலையில் பெரிய மண்மேடு சரிந்து போக்குவரத்து வசதிகள் துண்டிக்கப்பட்டதால் மாணவர்களும், வேலைக்கு செல்லும் தொழிலாளர்களும், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் மிகவும் சிரமப்பட்டனர்.
வீதியில் இடிந்து விழுந்த பாரிய மேட்டின் மீது பாடசாலை மாணவர்களும் ஏனையவர்களும் ஏறி ஆபத்தான முறையில் அவ்விடத்தை கடந்து சென்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1