பாதுகாப்பு அகழிக்குள் ஹமாஸ் போராளிகள் வீசிய 7 கையெறி குண்டுகளை மீண்டும் அவர்கள் மீதே வீதியெறிந்து சண்டையிட்ட இஸ்ரேல் சிப்பாய் ஒருவரின் வீடியோ வைரலாகி வருகிறது.
கடந்த ஒக்ரோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது திகைப்பூட்டும் தாக்குதலை ஹமாஸ் போராளிகள் மேற்கொண்டிருந்தனர். இதில் 1400 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளதாகவும், 200 இற்கும் அதிகமானவர்கள் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
ஹமாஸின் திடீர் தாக்குதலில் அதிகம் பாதிக்கப்பட்ட இஸ்ரேலிய பகுதி ரீம். அங்கு நடந்த நிகழ்வொன்றில் பங்கேற்ற பலர் ஹமாஸ் தாக்குலில் கொல்லப்பட்டுள்ளனர்.
ஹமாஸ் போராளிகள் அங்கு நுழைந்ததும், சில பொதுமக்கள் அங்குள்ள பாதுகாப்பு அகழியொன்றுக்குள் தஞ்சம் புகுந்துள்ளனர். அந்த அகழியை முற்றுகையிட்ட ஹமாஸ் பேராளிகள், உள்ளே கையெறிகுண்டை வீசினர்.
அங்கு தஞ்சம் புகுந்திருந்த இராணுவச்சிப்பாய் ஒருவர், உள்ளே வீசப்படும் கைக்குண்டுகளை மிக துரிதமாக வெளியே வீசிவிடுவார். இவ்வாறு 7 கையெறி குண்டுகளை அவர் வெளியே வீசியுள்ளார்.
8வது கையெறிகுண்டில் அவர் காயமடைந்தார்.