ஹாலி எல மற்றும் தெமோதரக்கு இடையில் மண் மேடு சரிந்த காரணத்தால், பதுளை – கொழும்பு புகையிரத சேவை இன்று (14) பிற்பகல் தடைப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த புகையிரதம் உடுவர நிலையத்திலும், கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த பொடிமனிகே புகையிரதம் தெமோதர நிலையத்திலும் நிறுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1