Site icon Pagetamil

சர்வதேச கணக்கியல் நாள் நிகழ்வுகள்

சர்வதேச கணக்கியல் நாள் நிகழ்வுகள் கடந்த 10 ஆம் திகதி, வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் நடைபெற்றது.

இலங்கை பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் (CA SriLanka) அனுசரணையுடன் முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் கணக்கியல் துறையினால் நடாத்தப்பட்ட இந்நிகழ்வில் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா, முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் பீடாதிபதி பேராசிரியா் என். கெங்காதரன், முன்னாள் பீடாதிபதிகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், இலங்கை பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் பிரதிநிதிகள் பணியாளர்கள், மாணவர்கள் , பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

Exit mobile version