இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் செயற்பாடுகள், உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளிட்டவை தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று (13) முறைப்பாடு செய்துள்ளார்.
அமைச்சர் முற்பகல் 11.00 மணியளவில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வந்து பல ஆவணங்களுடன் முறைப்பாட்டைக் கையளித்ததாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு சமர்ப்பித்து விட்டு வெளியேறிய போது, கிரிக்கெட் தொடர்பிலும், உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளமை குறித்தும் முறைப்பாடு செய்ய வந்ததாகவும், எதிர்காலத்தில் ஊடகங்களுக்கு அறிவிக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1