பிரதான பாதையில் மீரிகமவிற்கும் அம்பேபுஸ்ஸவிற்கும் இடையில் இன்று (13) காலை அலுவலக புகையிரதத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
ரம்புக்கனையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இந்த ரயிலில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அலுவலக ஊழியர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் ஏனைய பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.
தொழில்நுட்பக் கோளாறினால் பாதிக்கப்பட்ட ரயிலை மீட்டெடுக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1