27.6 C
Jaffna
November 29, 2023
விளையாட்டு

2025 சாம்பியன்ஸ் தொடருக்கும் இலங்கை தகுதி பெறவில்லை!

2023 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையில் பாடசாலை அணியின் தரத்தில் ஆடி ஏமாற்றமளித்த இலங்கை கிரிக்கெட் அணி, 2025 ஐசிசி சாம்பியன்ஸ் தொடரில் ஆடும் தகுதியை இழந்துள்ளது.

உலகக்கோப்பை தொடரில், லீக் ஆட்டங்களில் ஒன்பது போட்டிகளில் இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்று குழுநிலையில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்தது, இலங்கை. உலகக்கோப்பை லீக் சுற்றில் முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகள் சாம்பியன்ஸ் டிராபிக்கு தானாகவே தகுதி பெறும். இலங்கை அந்த வாய்ப்பை இழந்தது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சாம்பியன்ஸ் தொடரில், உலகின் முதல் எட்டு ஒருநாள் தரவரிசையிலுள்ள நாடுகள் போட்டியிடுகின்றன.

எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு பாகிஸ்தானால் சாம்பியன்ஸ் தொடர் நடத்தப்படும்.

2025 ஐசிசி சாம்பியன்ஸ் தொடரில், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய எட்டு அணிகள் இடம்பெறும்.

இந்த அணிகள் 2023 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையின் முதல் எட்டு இடங்களைப் பிடித்ததன் மூலம் போட்டியில் தங்கள் இடங்களைப் பெற்றன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பொருட்கள் போல் வீரர்கள் விற்பனை: ஐபிஎல் செயல்முறையும், சில விளக்கங்களும்!

Pagetamil

‘நான் திரும்பி வந்துட்டேன் ரோகித்’: ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சி

Pagetamil

IPL 2024 அப்டேட்: 10 அணிகளும் தக்கவைத்துள்ள, விடுவித்துள்ள வீரர்களின் முழு விவரம்

Pagetamil

மேற்கிந்தியத் தீவுகள் முன்னாள் வீரர் மார்லன் சாமுவேல்ஸூக்கு ஊழல் குற்றச்சாட்டில் 6 வருட தடை!

Pagetamil

இலங்கையின் பயிற்சியாளராக முன்னாள் வீரர்?

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!