பயணிகள் போக்குவரத்து பேருந்துகளில் சிசிடிவி கமராக்கள் பொருத்துவதை கட்டாயமாக்க நாடாளுமன்ற குழு முடிவு செய்துள்ளது. அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய எரிசக்தி மற்றும் போக்குவரத்து துறைசார் மேற்பார்வைக் குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
பயணிகள் பேரூந்துகளுக்கு வீதி அனுமதிப்பத்திரம் வழங்கும் போது GPS தொழில்நுட்பத்தை கட்டாயமாக்குமாறு குழுவின் தலைவர் நாலக பண்டார கோட்டேகொட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட காவல் துறை அதிகாரிகள், பயணிகள் போக்குவரத்து பேருந்துகளில் சிசிடிவி கமராக்கள் பொருத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர். அதன்படி பேருந்துகளில் சிசிடிவி கமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு குழுத் தலைவர் உத்தரவிட்டார்.
அனைத்து நெடுஞ்சாலைகளிலும் QR குறியீட்டைப் பயன்படுத்தி திறமையான கட்டண முறையைத் தொடங்குமாறும் தலைவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.