இலங்கையில் கிரிக்கெட்டை தடை செய்யும் தீர்மானம் தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்திடம் மேன்முறையீடு செய்யவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கை கிரிக்கெட்டுக்கு ஏன் தடைவிதிக்கப்பட்டது என்று அவர்கள் கேட்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் மீது அரசியல் அழுத்தமோ தலையீடுகளோ இல்லை என தெரிவித்த அமைச்சர், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாகிகள் வீட்டிற்கு செல்ல வேண்டும் என முழு நாடாளுமன்றமும் ஏகமனதாக ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இலங்கை கிரிக்கெட்iட சுத்தப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என ரொஷான் ரணசிங்க மேலும் தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1