இலங்கையிவ் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் முப்பத்தைந்து சதவீதம் பேர் மதுவை பயன்படுத்துகின்றனர் என்று மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் – இலங்கை (ADIC Sri Lanka) தெரிவித்துள்ளது.
இலங்கையில் தனிநபர் மது பாவனை 4.3 லீற்றர் எனவும், மதுபானம் அருந்துபவர்களின் தனிநபர் மது பாவனை 18.9 லீற்றராகவும் உள்ளதாக மத்திய நிலையம் கூறுகிறது.
பயன்படுத்தப்படும் மது வகைகளில், அரக்கு மதுபான வகை முதலிடத்திலும், அதற்கு அடுத்தபடியாக பியர் வகையும் உள்ளது. கசிப்பு பயன்படுத்தவோரின் எண்ணிக்கை 10 சதவீதத்திற்கு மேல் இல்லையென்றும் தெரிவித்துள்ளது.
ஏழைக் குடும்பங்கள் தங்களது வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கை மது, பியர் மற்றும் சட்டவிரோத மதுவுக்காகச் செலவிடுவதாக ADIC கூறியது.
நாட்டின் வருமானத்தை அதிகரிக்க வேண்டுமானால், மதுபானத்தின் மீதான வரியை அதிகரிக்க வேண்டும் எனவும், அதன் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியும் எனவும் அந்த மையம் தெரிவித்துள்ளது.
மதுபானங்களின் விலையை குறைத்து விற்பனை நிலையங்களை அதிகரிப்பதற்கும், கள்ளச்சாராயம் அதிகரிப்பதால் வரியை பெற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறும் விஞ்ஞானப்பூர்வமற்ற வாதங்களுக்கு அரசாங்கம் ஏமாற வேண்டாம் எனவும் மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.