தனது தாயை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, அளவுக்கு அதிகமான மாத்திரைகள் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய 16 வயது மகளை திபுலபலஸ்ஸ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
திபுலபலஸ்ஸ ரொட்டவெல புதிய கிராமத்தைச் சேர்ந்த 47 வயதுடைய ராஜசிங்க ஆராச்சிலகே சந்திரவதி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மஹியங்கனை வைத்தியசாலையில் கிளினிக்கிற்குச் சென்றுவந்த தனது தாயார், அங்கு வழங்கப்பட்ட மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சந்தேகிப்பதாக 16 வயதான மகள் பொலிசாரிடம் தெரிவித்திருந்தார்.
ஆனால் பிரேத பரிசோதனையில் பெண் கழுத்தை நெரித்து இறந்ததாக கூறப்பட்ட நிலையில், அவரது மகளை போலீசார் விசாரித்ததில் இந்த உண்மை தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1