இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரிப்பதற்காக இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர்கள் பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் (கோப் குழு) முன்னிலையில் எதிர்வரும் 14ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
ஊழல் மோசடிகள் தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக குழு தெரிவித்துள்ளது.
இலங்கை கிரிக்கட் நிறுவனத்தில் ஏதேனும் பிரச்சினை இருப்பின் அதனை பொது நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்ற குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (10) பாராளுமன்றத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிடம் தெரிவித்தார்.
இதேவேளை, விளையாட்டுத்துறை அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டம் அமைச்சர் ரொஷான் ரணசிங்க தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற போதிலும், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர்கள் அதில் பங்கேற்கவில்லை.