25.5 C
Jaffna
December 1, 2023
இலங்கை

‘இலங்கை கிரிக்கெட்டை பாதுகாக்கவே செயற்படுகிறேன்’: ரணில்!

தாம் எந்தவொரு பிரிவினருக்கும் ஆதரவளிக்கவில்லை எனவும், இலங்கை கிரிக்கெட்டின் பாதுகாப்பிற்காக மாத்திரமே செயற்படுவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கட்டுக்கோப்பு தீர்வுகள் இன்றி விளையாட்டு சட்டத்தை முற்றாக மாற்றியமைக்க வேண்டும் எனவும், கிரிக்கெட் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் சித்திரசிறி அறிக்கை உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஆளும் கட்சி உறுப்பினர்களுடன் நேற்று (9) பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் இலங்கை கிரிக்கெட் மீது சர்வதேச கிரிக்கெட் பேரவை கண்காணித்து வருவதாகவும், இலங்கை கிரிக்கெட்டில் சர்வதேச செல்வாக்கு ஏற்படாத வகையில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிரிக்கட் வேலைத்திட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதம் சரியான நேரத்தில் இடம்பெற்றது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நேற்றுமுன்தினம் பாராளுமன்றத்தில் நீதித்துறை செயற்பாடுகள் தொடர்பில் வெளியிடப்பட்ட சில அறிக்கைகளை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் தெரிவித்தார்.

கிரிக்கெட்டுக்கு மிகவும் பொருத்தமான சித்திரசிறி அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார். “இந்த நோக்கத்திற்காக இடைக்கால குழுக்களை நியமிப்பது போதாது என்பதே எனது கருத்து” என்று அவர் கூறினார்.

“நான் அமைச்சருக்கு பெயர்களை பரிந்துரைத்தேன், ஏனெனில் அவர் இதை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றால், அதை நிறுத்த முடியும். மேலும் இது குறித்து அமைச்சரவையில் விவாதித்தோம். இந்நிலையில் இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்திற்கு சென்றுள்ளது.

“இவை அனைத்தும் தற்காலிக தீர்வுகள்,” என்று அவர் கூறினார். முழுமையான ஆட்சி மாற்றமே பொருத்தமானதாக இருக்கும் என ஜனாதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

ஜே.ஆர்.ஜெயவர்தன மற்றும் காமினி திஸாநாயக்க ஆகியோரால் கிரிக்கெட் ஆரம்பிக்கப்பட்டது. அப்போது பாடசாலை கிரிக்கெட்டை வளர்க்கும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்படித்தான் எங்கள் முதல் அணி முன்னணிக்கு வந்தது”, என்றார்.

“அதன் பிறகு, 1996 அணி உருவாகி உலகக் கோப்பையை வென்றது. எனவே, கிரிக்கெட் விளையாட்டை மீண்டும் வளர்க்க வேண்டும். நான் எந்த ஒரு பிரிவினரையோ அல்லது கட்சியையோ பிரதிநிதித்துவப்படுத்தவில்லை.

எனக்கு ஒரே கட்சிதான். அது இலங்கை கிரிக்கெட் அணி. அதை மேம்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுபற்றி நேற்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பேசியதுதான் எனக்கு பயம். அது நம்மை பாதிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இன்று முன்வைக்கப்பட்ட இந்த பிரேரணையை ஏற்றுக்கொள்வோம்” என ஜனாதிபதி நேற்று தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பேருந்து, முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றமில்லை!

Pagetamil

2வது நாளாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான போதகர் ஜெரோம் பெர்னாண்டோ!

Pagetamil

விபத்தில் ஒருவர் பலி

Pagetamil

மழை அதிகரிக்கும்!

Pagetamil

O/L பெறுபேறுகள் வெளியாகின!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!