கஞ்சாவுடன் பயணித்த இளைஞனை ஆனையிறவு வீதி சோதனை நிலையத்தில்
வைத்து இராணுவ புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கிளிநொச்சி ஆனையிறவு வீதி சோதனை நிலையத்தில் நேற்று (9) மாலை
இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உடுத்துறை பகுதியில் இருந்து கஞ்சா போதைபொருளுடன் இளைஞர் ஒருவர் செல்வதாக
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய ஆனையிறவு
பகுதியில் வைத்து சோதனையிட்ட போது மோட்டார் சைக்கிளுடன் 390 கிராம்
கஞ்சா போதைபொருளுடன் வவுனியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது
செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இளைஞன் பளை பொலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1