எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்ட மருத்துவ பீட மாணவர் செயற்பாட்டாளர்கள் மீது பொலிஸார் நீர்த்தாரை தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மருதானை புகையிரத நிலையத்திற்கு அருகில் போராட்டக்காரர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட 12 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
சப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் மருதானை சந்தியில் இருந்து சுகாதார அமைச்சுக்கு பேரணியாக வந்தபோது மருதானை பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
ஆர்ப்பாட்டக்காரர்களை அந்த இடத்தில் தடுத்து நிறுத்திய பொலிஸார், மாணவர் சங்கத்தைச் சேர்ந்த 5 பேர் அடங்கிய குழுவை சுகாதார அமைச்சுக்குச் சென்று கலந்துரையாட அனுமதித்தனர்.
அதனைத் தொடர்ந்து மருதானை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1