14 வயது சிறுமியின் அருகில் கழிவறை கிருமிநாசினி போத்தலை வைத்து “குடி, இன்னும் குடி, இன்னும் கொஞ்சம் குடி, மரணம் வரை குடி” என்று கூறி கொடூரமாக தாக்கிய வழக்கை விசாரிக்கத் தொடங்கியுள்ளதாக நாரஹேன்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தலைமை வார்டன் மற்றும் சிறுவர் காப்பக ஊழியர் ஒருவரின் திட்டுதல் மற்றும் தாக்குதலை தாங்க முடியாத 14 வயது சிறுமி, கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் கிருமி நாசினி திரவத்தை குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாரஹேன்பிட்டி பகுதியில் கிருமி நாசினி திரவத்தை அருந்திய பின் சிறுமியொருவர் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை நாரஹேன்பிட்டி பொலிஸாருக்கு வழங்கிய தொலைபேசிச் செய்தியின் அடிப்படையில் நாரஹேன்பிட்டி பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியக உத்தியோகத்தர்கள் சிறுவர் காப்பகத்துக்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்ததாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விசாரணையில், கடந்த 6ஆம் திகதி மதியம், சிறுவர் காப்பகத்தின் தலைமை காப்பாளரும், சமையலறை பணிப்பெண்ணும் சிறுமியை துஷ்பிரயோகம் செய்து தாக்கியதாகவும், கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் கிருமி நாசினி திரவத்தை சிறுமி குடித்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
வார்டன் மற்றும் சமையலறைப் பணிப்பெண் ஆகியோர் கிருமி நாசினிகள் அடங்கிய போத்தலை சிறுமியின் அருகில் வைத்து, “குடி, இன்னும் குடி, இன்னும் கொஞ்சம் குடி, மரணம் வரை குடி” என்று கூறி தொடர்ந்தும் தாக்கிக் கொண்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.