இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தை நிர்வகிக்க நியமிக்கப்பட்ட இடைக்கால குழுவுக்கு இடைக்கால தடைவிதிக்கப்பட்டது பக்கச்சார்பான தீர்ப்பு. கிரிக்கெட் நிறுவனத்துடன் தொடர்புடைய நீதிபதியினால் வழங்கப்பட்ட தீர்ப்பு என தெரிவித்துள்ளார் விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
சூதாட்ட ஷம்மியா அல்லது ரொஷானா என இரண்டில் ஒரு முடிவை ஜனாதிபதி எடுக்க வேண்டுமென்றும் தெரிவித்தார்.
இன்று (8) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது இந்த தகவல்களை வெளிப்படுத்தினார்.
அவர் வெளிப்படுத்திய தகவல்கள் வருமாறு-
2022 மார்ச் 23ஆம் திகதி அரசாங்கம் பலமாக இருந்தபோது அரசிலிருந்து வெளியேறினேன். அரசு கஸ்டமாக இருந்தபோது வெளியேறவில்லை. கோட்டாபய என்ற நபர் திருடவில்லை. 77 ஆம் ஆண்டு முதல் இருந்த பிரச்சினைகளை அவர் சுமந்தார். நாட்டில் எழுந்த போராட்டங்களுக்கு மதிப்பளித்து பதவியை துறந்தார்.
விளையாட்டின் முன்னேற்றத்துக்கு கிராமிய மட்டத்தில் இனம்கண்டு, தேசிய சர்வதேச மட்டத்துக்கு கொண்டு செல்ல திட்டமிட்டோம். இலங்கையிலுள்ள 66 சங்கங்களிற்கு இதற்கான வாய்ப்பை ஏற்படுத்தினேன். ரஃபி, உதைபந்தாட்டத்தில் சிறு சர்ச்சை ஏற்பட்டது. இந்த காலத்தில் 160 சர்வதேச பதக்கங்களை இலங்கை பெற்றது.
2022 ரி20 கிரிக்கெட் உலக கிண்ண தொடரில் வீரர்கள், கிரிக்கெட் சங்கத்திற்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. நிதிக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எழுந்த குற்றச்சாட்டுக்களை அடுத்து, 5 பேர் கொண்ட விசாரணைக்குழு நியமிக்கப்பட்டது. அதன் அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்படுகிறது. எந்த கோப்புமில்லையென யாரோ ஜனாதிபதிக்கு சொல்லியுள்ளனர். இதோ அந்த அறிக்கை.
கிரிக்கெட் நிறுவனம் தொடர்பாக ஒட்டுமொத்த தடவியல் அறிக்கை கோரினேன். அவ்வாறு தர முடியாதென கூறினார். அவர் உலகக்கிண்ணம் பற்றிய தடயவியல் அறிக்கை தர முடியுமென்றார். ஒட்டுமொத்த தடயவியல் அறிக்கை தருமாற கணக்காய்வாளர் நாயக்கத்துக்கு பாராளுமன்றம் ஒரு உத்தரவு பிறப்பித்தால், கிரிக்கெட் நிறுவனத்துக்காக ஆஜரான சட்டத்தரணிகளின் ஆடை களையும்.
நேற்று நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணிகள், தடயவியல் அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லையென்றனர். இதோ அந்த அறிக்கை. ஜனாதிபதி, சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் அறிக்கை அனுப்பப்பட்டது.
நீதிமன்றம் இந்த விவகாரத்தில் கணக்காய்வாளர் நாயக்கத்திடமே இறுதி அறிக்கை கோரும். சட்டமா அதிபர் ஏன் 2 மாதங்களாக கிரிக்கெட் நிறுவன மோசடிகளை நீதிமன்றம் கொண்டு செல்லவில்லை.
இந்த மோசடி தொடர்பில் ஆசிய கிரிக்கெட், சர்வதேச கிரிக்கெட் நிறுவனங்களுக்கும் ஆதாரங்களை அனுப்பி வைத்துள்ளேன். ஜெய் சாவிற்கு இதனை விசேட கடிதம் மூலம் அனுப்பி வைத்துள்ளேன்.
ஊழல் மோசடிகளை தடுக்கவும், நம்பிக்கையை கட்டியெழுப்பவும் ஒரு இடைக்கால நிர்வாகத்தை அமைத்தேன்.
இந்த அரசாங்கத்தில் நான் இருந்தால் ஜனாதிபதியை நான் பாதுகாக்க வேண்டிய கடமை எனக்குள்ளது. ஆனால், இங்கு யாரோ ஒருவர் ஜனாதிபதியை அழிக்க முயற்சிக்கிறார். எனவே நான் கூறுகிறென், இந்த ஊழல் மிக்கவர்கள் ஜனாதிபதியை நெருக்க அனுமதியளிக்ககூடாது. ஜனாதிபதி சரியான செயற்படுவார் என்றுதான் அவரை ஜனாதிபதியாக்கினார்கள்.
69 இலட்சம் வாக்குகளை பெற்ற கோட்டாபய, என்னை விளையாட்டு அமைச்சராக்கி, இந்த துறையிலுள்ள பிரச்சினைகளை தீர்க்க சொன்னார். நான் பதவியை பொறுப்பேற்றுக் கொண்டு, பிரதமர் ரணிலின் அலுவலகத்துக் சென்றேன். அவர் சொன்னார், இந்த துறையிலுள்ள அழுக்கை அகற்றுமாறு கேட்டுக் கொண்டார்.
நேற்று முன்தினம் காலை, ஜனாதிபதி ஊடகப்பிரிவு ஒரு செய்தி வெளியிடுகிறது. ஜனாதிபதிக்கும் தெரியாது, அமைச்சரவைக்கும் தெரியாது என. இதனையும், சட்டத்தரணி நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதில் அமைச்சரவையிடம் என்ன தெரிவிக்கவுள்ளது. ஜனாதிபதிக்கு எதை கூற வேண்டும், எதை தனியாக செய்வது என எனக்கு தெரியும்.
இந்த நாட்டின் பால் குடமாக நீதிமன்றங்களே உள்ளன. இலங்கையில் 173 நீதிமன்றங்கள் உள்ளன. இதில் ஒரு நீதிமன்றத்தில் ஒரு அறை உள்ளது. ஒரு நீதிமன்றத்தில் அறை உள்ளது. ஆனால் 301வது அறையில் கிரிக்கெட் நிருவாகத்துக்கு சாதகமாக சட்டம் உள்ளது. தற்போதைய மேல்நீதிமன்ற தவிசாளர் பந்துல கருணாரத்ன குற்றவியல் வழக்குகளையே விசாரித்து வந்தார். ஆனால் இப்போது ரிட் மனுவை விசாரிக்கிறார். கிரிக்கெட் நிறுவன வழக்கை தாமே விசாரிக்கும் நோக்கத்துடன், மேல் நீதிமன்ற தவிசாளராக பதவியேற்றதும் சுற்றறிக்கையொன்றை வெளியிட்டார்.
இந்த நீதிபதி கிரிக்கெட் நிறுவன தலைவரின் நெருங்கிய நண்பர். சட்டத்தரணி அசேல ரக்கவ என்பவரின் நெருக்கிய உறவினர். கிரிக்கெட் நிறுவனத்துக்காக முன்னர் பந்துல கருணாரத்ன ஆஜராகியுள்ளார். இந்த ஊழல் அமைப்பிற்கு சாதகமாக நீதிமன்றம் செயற்பட்டுள்ளது.
பிள்ளைகளிற்கு விளையாடுவதற்க சப்பாத்து இல்லை. ஆனால் சட்டத்தரணிகளுக்காக 366 இலட்சத்தை செலவழித்துள்ளனர். இது கணக்காய்வு அறிக்கையில் உள்ளது.
நான் ஞாயிற்றுக்கிழமை வர்த்தமானியை பரசுரித்திருந்தேன்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் பட்டப்பகலில் கோடிக்கணக்கான பணத்தை ஊழல் செய்துள்ளது. இது மக்களுக்கு தெளிவாக தெரியும். அது கணக்காய்வு அறிக்கையிலும் உள்ளது. இது தொடர்பான அறிக்கை இருந்தும், அதை பொருட்படுத்தாமல் நீதிமன்றம் இந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் நிறுவனம் தனக்கு சாதகமான தீர்ப்பை பெறப்போவதாக நான் அறிந்து உடைந்து போனேன். உடனடியாக சட்டமா அதிபரை தொடர்பு கொண்டேன். 5 முறை தொடர்பு கொண்டேன். இந்த வழக்கில் சட்டமா அதிபர் ஆஜராக வேண்டுமென கேட்டுக்கொண்டேன். சட்டமா அதிபரின் அனுமதியில்லாமல் ஆஜராக முடியாது என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மனொகர் தெரிவித்தார்.
கிரிக்கெட் நிறுவனத்தின் ஊழல் அமைப்புக்கும், மேல் நீதிமன்ற நீதிபதிக்குமிடையில் உள்ள தொடர்பால் பக்கச்சார்பான இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றார்.
இதன்போது குறுக்கிட்ட பிரதி சபாநாயகர், நீதிபதிகளின் பெயர்களை குறிப்பிட்டு பேசுவதை தவிர்க்கமாறு கேட்டுக் கொண்டார்.
நீதித்துறையில் உள்ள சிறு குறையை நான் சுட்டிக்காட்டினேன். இந்த விவகாரங்களை இங்கு பேசாமல், பிரச்சினைகளை இங்கு பேசாமல் எங்கு பேசுவது? மக்கள் இவற்றை பேச முடியுமா? இந்த நீதிபதி உயர்நீதிமன்ற நீதிபதியாக விரைவில் பதவி உயர்வு பெறவுள்ளார். இவர்கள் அரசியல் ஆதாயமுள்ள பக்கச்சார்பான தீர்ப்பை வழங்க முடியும்.
நான் நீதிமன்றத்தை அவமதிக்கும் விதமாக, நீதிபதிகளை அவமதிக்கும் விதமாக பேசவில்லை. நீதித்துறையில் உள்ள குறைபாட்டை சுட்டிக்காட்டினேன். இந்த விடயங்களை பிரதம நீதியரசருக்கும், நீதிச்சேவைகள் ஆணைக்குழுவுக்கும் அனுப்பி வைக்குமாறு கோருகிறேன்.
சூதாட்ட சம்மியா, ரொசான் ரணதுங்கவா, ஜனாதிபதி இரண்டில் ஒன்றை தெரிவு செய்ய வேண்டும். ஜனாதிபதிக்கு தெரியாமல் பல விடயங்கள் நடக்கின்றன. இந்த ஊழல் அமைப்பில் ஜனாதிபதியின் அலுவலர்களுக்கு தொடர்புள்ளதா என்பதையும் ஆராய வேண்டும். ஜனாதிபதி ஊடகப்பிரிவு என்னைப்பற்றி, ஜனாதிபதிக்கே தெரியாத விடயத்தை முன்னரும் செய்தியாக வெளியிட்டிருந்தது.
சட்டத்தரணிகள் சங்கம் இந்த விடயத்தில் அக்கறையெடுத்து அழுத்தம் கொடுக்கும் நடவடிக்கையெடுக்க வேண்டும்.
இந்த குழுவினர் எனக்கு தினமும் தகவல் அனுப்புகிறார்கள். ஜெய் ஷா தமக்கு உதவுவதாகவும், அழுத்தம் தருவதாக கூறி, இலங்கையை ஐசிசியில் தடை செய்ய வைப்பதாகவும் மிரட்டுகிறார்கள்.
இந்த நாட்டில் அமைச்சருக்கு அழுத்தம் கொடுக்கும் விதமான அழுத்தம் உள்ளது. அவர்களுக்கு பதாள உலகக்குழுவுடன் தொடர்புடையது. ஷம்மியின் மெய்ப்பாதுகாவலர் ஒரு பாதாள உலகக்குழு உறுப்பினர். எல்.பி.எல்லை பார்க்க ஜனாதிபதி சென்ற போது, பக்கத்தில் ஷம்மி இருந்தார். அருகில் அவரது பாதாள உலகக்குழு மெய்ப்பாதுகாவலர்.
ஜனாதிபதியின் ஒத்துழைப்பை நான் கோருகிறேன். அவருக்கு நாம் ஒத்துழைப்பை வழங்குகிறேன். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியிடம் நான் ஒத்துழைப்பை கோருகிறேன். ஐசிசியினால் எப்படி எம்மை தடை செய்ய முடியும்? பாகிஸ்தானிலும், தென்னாபிரிக்காவிலும் இடைக்காலசபைகள்தான் உள்ளது.
69 இலட்சம் மக்களின் வாக்குகளை பெற்ற ஜனாதிபதி, பொதுமக்களின் போராட்டத்தையடுத்து வீடு சென்றார். இதன்மூலம் சொல்லப்பட்ட செய்தி என்ன? பொலன்னறுவை மக்கள் என்னில் அன்பை வைத்து தெரிவு செய்துள்ளனர். அந்த நம்பிக்கையை நான் மீற மாட்டேன். தவறை சுட்டிக்காட்ட பின்வாங்க மாட்டேன்.
கிரிக்கெட் ஊழல், மோசடியாளர்களை வீட்டுக்கு அனுப்ப அனைத்து தரப்பினரிடமும் ஒத்துழைப்பை கோருகிறேன் என்றார்.