வடமாகாணத்தில் உள்ள குடிநீர் பிரச்சினைகளை தீர்க்க பல்வேறு திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக பிரதமர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் எழுப்பிய கேள்வியொன்றுக்கு, இன்று (8) நாடாளுமன்றத்தில் பதிலளிக்கையிலேயே இதனை தெரிவித்தார்.
வடக்கின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க பல வழிகள் பற்றி ஆராயப்படுகிறது. வடக்குக்கு ஆறுகளை திசைதிருப்புவது, பேராசிரியர் ஆறுமுகம் முன்வைத்த திட்டங்கள் தொடர்பில் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை ஆராய்ந்து வருகிறது. கடல்நீரை சுத்திகரித்து வழங்குவது பெரும் செலவானது. மக்களும் அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்றார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1