இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு புதிய யாப்பு அறிமுகப்படுத்துவதற்கான சட்டமூலம், இலங்கை கிரிக்கெட் தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த வரைவு சட்டமூலத்தை நீதிபதி கே.டி.சித்ரசிறி தலைமையிலான குழு உருவாக்கியுள்ளது.
ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் அமைச்சரவை உபகுழுவிடம் இது கையளிக்கப்பட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1