28.8 C
Jaffna
December 7, 2023
இலங்கை

நுவரெலியா தபால் அலுவலகத்தை இந்தியாவின் தாஜ் சமுத்திரா ஹோட்டலுக்கு வழங்க தீர்மானம்!

நுவரெலியா தபால் அலுவலகத்தை ஹோட்டலாக மாற்றும் திட்டத்தின்படி, இந்தியாவின் தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவைக்கு பின்னரான வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று உரையாற்றிய அமைச்சர் குன்வர்தன, நுவரெலியா தபால் நிலையம் மிகவும் பாழடைந்த நிலையில் காணப்படுவதாகவும், அதனை புனரமைக்கவோ அல்லது வர்ணம் பூசவோ முடியாத நிலையில் அரசாங்கத்தினால் பராமரிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

செயலிழந்த மற்றும் பயன்படுத்தப்படாத கட்டடத்தை வளமாக பயன்படுத்துவதற்கான யோசனையொன்று ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

“சீதா எலிய வழியாக வரும் இந்திய சுற்றுலாப் பயணிகள் நுவரெலியாவில் உள்ள சுற்றுலாத் தலங்களையும் பார்வையிடலாம்,” என்று அவர் மேலும் கூறினார்.

நுவரெலியா தபால் அலுவலகம் நுவரெலியா நகரின் மையத்தில் அமைந்துள்ள ஒரு தொன்மையான அடையாள கட்டிடமாகும்.

டியூடர் மறுமலர்ச்சி கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்ட இந்த இரண்டு மாடி சிவப்பு செங்கல் கட்டிடம் நாட்டின் பழமையான தபால் நிலையங்களில் ஒன்றாகும். அதனை ஹோட்டலாக மாற்றும் அரசின் திட்டத்துக்கு சமூகத்தில் கணிசமான எதிர்ப்பு உள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அத்துமீறிய 22 இந்திய மீனவர்கள் கைது

Pagetamil

தெல்லிப்பளை வாள்வெட்டு சம்பவம்: 3 ரௌடிகள் கைது!

Pagetamil

விபத்தில் 2 பேர் பலியான சம்பவத்தில் பேருந்து சாரதிக்கு 12 வருட கடூழிய சிறை!

Pagetamil

முன்னாள் டிஐஜி நாலக சில்வா விடுதலை!

Pagetamil

கல்கிசை நீதவானை சாட்சியமளிக்க முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!