28 C
Jaffna
December 5, 2023
மலையகம்

ஆசிரியர் தாக்கியதால் பாதிக்கப்பட்ட மாணவன்

வகுப்பு ஆசிரியரால் தாக்கப்பட்ட 9 வயது பாடசாலை மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹட்டன் பிராந்திய கல்வி அலுவலகத்தின் கீழ் இயங்கும் பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட்  தமிழ் மகா வித்தியாலயத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆரம்ப பாடசாலையில் கடமையாற்றும் வகுப்பு ஆசிரியை ஒருவரால் தாக்கப்பட்டு காயப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பான முறைப்பாட்டின் அடிப்படையில் பொகவந்தலாவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கெர்க்கஸ்வோல்ட் தோட்டத்தைச் சேர்ந்த சதீஷ் குமார் பபிஷ்கான் என்ற பாடசாலை மாணவனே இவ்வாறு தாக்கப்பட்டதாக எமது உள்ளூர் செய்தியாளர் தெரிவித்தார்.

பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் மாணவன்,  நான்காம் தரத்தில் கல்வி பயின்று வருவதாகவும், புதிதாக தனது பாடசாலைக்கு வந்த ஆசிரியர் எந்த தவறும் செய்யாத தன்னை தடியால் தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வீதியின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது!

Pagetamil

இரண்டு இராணுவத்தினர் தற்கொலை!

Pagetamil

மின்சாரம் தாக்கி தந்தையும், மகளும் பலி

Pagetamil

UPDATE: மண்மேடு சரிந்து விழுந்ததில் 2 யுவதிகள் பலி!

Pagetamil

காசல்ரீ நீர்த்தேக்கத்திலிருந்து நீர் வெளியேற்றப்படுகிறது!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!