குடிபோதையில் பொலிஸ் ஜீப்பை ஓட்டி விபத்து ஏற்படுத்திய குற்றச்சாட்டில் வாழைச்சேனை பொலிஸ் போக்குவரத்து பிரிவினரால் கைது செய்யப்பட்ட கல்குடா பொலிஸ் நிலைய கான்ஸ்டபிள் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் நவம்பர் மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கல்குடா பொலிஸ் பொறுப்பதிகாரியை வாழைச்சேனை நீதிமன்றிலிருந்து, பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வருவதற்காக கல்குடா பொலிஸ் நிலையத்திற்கு சொந்தமான ஜீப்பை கான்ஸ்டபிள் ஓட்டிச் சென்றுள்ளார். கல்குடாவிலிருந்து வாழைச்சேனை நோக்கிச் சென்ற ஜீப் மீன்பிடித் துறைமுகத்திற்கு முன்பாக வீதியை விட்டு விலகி வீட்டின் சுவரில் மோதி முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனம் மீது மோதியுள்ளது.
ஜீப்பை செலுத்திய இந்த உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டதாகவும் வாழைச்சேனை வைத்தியசாலையில் வைத்திய பரிசோதனையின் போது அவர் மதுபோதையில் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சனிக்கிழமை (4) வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இந்த கான்ஸ்டபிளை பணி இடைநிறுத்த நடவடிக்கை எடுத்திருந்தார்.