28.8 C
Jaffna
December 7, 2023
இலங்கை

‘சீன முதலீட்டை வடக்கு மக்கள் வரவேற்பார்கள் என நம்புகிறேன்’: சீன தூதர்!

சீன தொழிற்துறையினர் முதலீட்டாளர்கள் வடக்கில் முதலிட ஆர்வமாக உள்ளனர் என தெரிவித்த இலங்கைக்கான சீன தூதுவர் கி ஸென் ஹொங்,வடக்கு மக்களும் அதனை வரவேற்க தயாராகவுள்ளனர் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சீன தூதுவர் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்து நெடுந்தீவு பிரதேச மக்களுக்காக 500 உலருணவுப் பொதிகளை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் கையளித்தனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இலங்கைக்கான சீன தூதுவர் கி ஸென் ஹொங் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் நான் வடக்கு மாகாணத்திற்கு வந்துள்ளேன்.சீன பௌத்த மக்களால் 5000 உணவு பொதிகளை வடக்கு மாகாண மக்களுக்கு வழங்க வந்துள்ளேன்.

கடந்த முறை வடக்கில் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வழங்கினோம். உணவுப் பொதி நெருக்கடி நிலையில் உதவியாக இருக்கும்.உணவு பொதி 7000 ரூபாய் பெறுமதியானது.

உங்களுக்கும் எங்களுக்கும் உள்ள உறவின் அடிப்படையில் உதவிகளை வழங்குவோம். கொரோனா நேரத்தில் நீங்களும் சினோபாம் தடுப்பூசியை பெற்றிருப்பீர்கள்.

பொருளாதார நெருக்கடியின் போது இலங்கையுடன் பொருளாதாரதாதை உயர்த்த முதலாவதாக சீனாவே கை கொடுத்தது.சீன எதிர்காலத்திலும் கை கைகொடுக்கும்.

15 மில்லியன் ரூபாய் பெறுமதியான உதவிகளை சீனா வழங்கவுள்ளது.
5 மில்லியன் உணவு பொருட்களாகவும் 5 மில்லியன் மீனவர்களுக்காகவும 5 மில்லியன் வீட்டு திட்டத்திற்கும் வழங்கவுள்ளது.

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சீனா சென்றபோது இலங்கை கடலுணவை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது. சீனாவில் இருந்து இலங்கைக்கு கடலுணவு இறக்குமதி செய்யப்படாது. விசேடமாக வடக்கு மாகாணத்திற்கு கடலுணவு இறக்குமதி செய்யப்படாது.

சீனா உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடு. மிகப்பெரிய சந்தை வாய்ப்பு உள்ளது. உங்களை அதற்கே வரவேற்கிறோம்.

சீன தொழிற்துறையினர் முதலீட்டாளர்கள் வடக்கில் முதலிட ஆர்வமாக உள்ளனர். வடக்கு மக்களும் அதனை வரவேற்க தயாராகவுள்ளனர் என்று நம்புகிறேன் – என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அத்துமீறிய 22 இந்திய மீனவர்கள் கைது

Pagetamil

தெல்லிப்பளை வாள்வெட்டு சம்பவம்: 3 ரௌடிகள் கைது!

Pagetamil

விபத்தில் 2 பேர் பலியான சம்பவத்தில் பேருந்து சாரதிக்கு 12 வருட கடூழிய சிறை!

Pagetamil

முன்னாள் டிஐஜி நாலக சில்வா விடுதலை!

Pagetamil

கல்கிசை நீதவானை சாட்சியமளிக்க முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!