வடக்கில் நிலவுகின்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் பிரதமர் தினேஸ்
குணவர்த்தனவுடன் முன்னாள் நாடாளுடன்ற உறுப்பினரும், சமத்துவக் கட்சியின்
பொதுச் செயலாளருமான மு.சந்திரகுமார் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இன்றைய தினம் கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் இச் சந்திப்பு இடம்பெற்றது.
இதன் போது வடக்கில் வனவளதினைக்களத்தினால் கையக்பபடுத்தப்படுத்தப்பட்டுள்ள
பொது மக்களின் காணி மற்றும் விவசாய நிலங்கள், வடக்கில்
நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற குடிநீர் விநியோக திட்டங்களின் போது
ஏற்படுகின்ற தடைகள், உள்ளுராட்சி மன்றங்களுக்குச் சொந்தமான வீதிகளை விசேட
நிதி ஒதுக்கீட்டின் கீழ் புனரமைக்க வேண்டிய தேவைகள், பொதுநிர்வாக
உள்நாட்டலுவலர்கள் அமைச்சின் கீழ் நிலவுகின்ற வளப் பிரச்சினைகள் என்பன
பிரதமரின் கவனத்திற்கு சந்திரகுமார் அவர்களினால் கொண்டு
செல்லப்பட்டுள்ளது.
விடயங்களை கேட்டறிந்துகொண்ட பிரதமர் சில விடயங்கள் தொடர்பில் உடனடியாக
கவனம் செலுத்துவதாகவும், ஏனைய விடயங்களில் எதிர் காலத்தில் கவனம்
எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.