ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் மன்னாரில் ஆரம்பித்துள்ளது.
மன்னாரிலுள்ள ரெலோ அலுவலகத்தில் இன்று (5) காலை 10 மணியளவில் கூட்டம் ஆரம்பித்தது.
இதில் புளொட் அமைப்பின் தரப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், ஆர்.இராகவன், ரெலோ தரப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தன் கருணாகரம் மற்றும் சுரேன் குருசாமி, ஈ.பி.ஆர்.எல்.எவ் தரப்பில் சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், தமிழ் தேசிய கட்சியின் தரப்பில் சட்டத்தரணி என்.சிறிகாந்தா, ஜனாநாயக போராளிகள் கட்சியின் வேந்தன், துளசி, நகுலேஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1