25.5 C
Jaffna
December 1, 2023
இலங்கை

சிகரெட் பெட்டியை பறித்த பொலிசாருக்கு 2 ஆண்டு கடூழிய சிறை

இரவு ரோந்து கடமையில் ஈடுபட்டிருந்தபோது  சீன பிரஜை ஒருவரிடம் இருந்து 2000 ரூபா மற்றும் சிகரெட் பெட்டியை திருடிய குற்றச்சாட்டில் குற்றஞ்சாட்டப்பட்ட கொள்ளுப்பிட்டி பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் கான்ஸ்டபிள் ஒருவருக்கு இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கோட்டை நீதவான் திலின கமகே நேற்று தீர்ப்பளித்தார்.

இந்த சம்பவம் 2016 ஆம் ஆண்டு நடந்தது. ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிசார் தன்னிடம் இருந்த பணத்தையும் சிகரெட் பெட்டியையும் கொள்ளையடித்துச் சென்றதாக சீன நாட்டவர் புகார் அளித்திருந்தார்.

நீண்டகாலமாக நிலுவையில் இருந்த வழக்கில் தற்போது வனாத்தவில்லுவ காவற்துறையில் கடமையாற்றும் லபீர் என்ற சார்ஜன்ட் மற்றும் துமிந்த என்ற கான்ஸ்டபிள் ஆகியோர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பேருந்து, முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றமில்லை!

Pagetamil

2வது நாளாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான போதகர் ஜெரோம் பெர்னாண்டோ!

Pagetamil

விபத்தில் ஒருவர் பலி

Pagetamil

மழை அதிகரிக்கும்!

Pagetamil

O/L பெறுபேறுகள் வெளியாகின!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!