27.6 C
Jaffna
November 29, 2023
இலங்கை

மல்லாவியில் நிதி முகாமைத்துவம் தொடர்பான கலந்துரையாடல்

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி பகுதியில் ஐக்கியநாடுகள் சபையின் சிறுவர் பாதுகாப்பு நிதியத்தின் அனுசரணையில் சர்வோதய ஊடாக நிதி முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு இன்றைய தினம் மல்லாவி பகுதியில் இடம்பெற்றது.

பொருளாதாரப்பிரச்சனை என்பது கொரோனா காலப்பகுதியில் மிக மோசமாக எம் மக்களை தாக்கியிருந்தது.

இனியொரு சந்தர்ப்பங்களில் அவ்வாறான பொருளாதார பிரச்சனை மோசமடையும்போது பொருளாதார தாக்கத்திலிருந்து எவ்வாறு மக்கள் மீளெழ வேண்டும் என்றும், அந்த சந்தர்ப்பங்களில் நிதி முகாமைத்துவத்தை எ‌வ்வாறு பாதுகாப்பது என்றும் தெளிவுறுத்தப்பட்டே குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

குறித்த நிகழ்வில் பொருளாதார பிரச்சனை எழுந்துள்ள இந்த காலப்பகுதியில் பொது மக்கள் எவ்வாறு கிடைக்கின்ற பணத்தினை சிக்கனமாக கையாள்வது என்பது தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.

குறித்த விழிப்புணர்வு நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர்
வைத்தியர் சாந்தமேனன், மற்றும் சுகாதார கல்வி அதிகாரி ஜெயபாலன் ஆகியோர் வளவாளராக கலந்து சிறப்பித்திருந்தனர்.

நிகழ்வில் கல்விளான், துணுக்காய் மற்றும் மல்லாவி ,ஜயங்கன்குளம் பகுதியை சேர்நத சுமார் 60க்கு மேற்பட்ட இளைஞர், யுவதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

ஜெகதீஸ்வரன் பிரஷாந்த் –

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

காங்கேசன்துறையில் துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான சொத்துக்களை சேதப்படுத்தி, தொடரும் இரும்பு திருட்டு

Pagetamil

ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தலை கண்டிக்கிறது யாழ் ஊடக அமையம்!

Pagetamil

யாழ் யுவதி கடத்தப்பட்டு வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொலை: மரண தண்டனை விதிக்கப்பட்ட 2 இராணுவத்தினர் விடுதலை!

Pagetamil

மஹிந்த பயணித்த வாகனத்தின் மீது விழுந்த வீதித்தடுப்பு!

Pagetamil

இன்றைய வானிலை

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!