25.5 C
Jaffna
December 1, 2023
சினிமா

கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ அறிமுக வீடியோவை வெளியிடும் ரஜினி, ஆமீர்கான், ராஜமவுலி

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ படத்தின் அறிமுக வீடியோவை நடிகர் ரஜினிகாந்த் வெள்ளிக்கிழமை வெளியிடுகிறார்.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படம், ‘இந்தியன் 2’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். இதில் ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, சித்தார்த், பிரியா பவானி சங்கர் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிவடைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதன் கிராபிக்ஸ் பணிகள் அமெரிக்காவில் நடந்து வருகின்றன. இந்தப் படத்தில் முக்கிய வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் நீளம் கருதி படத்தை இரண்டு பாகங்களாக வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ‘இந்தியன் 2’ படத்தின் அறிமுக வீடியோ நாளை (3) மாலை 5.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் தமிழ் வெர்ஷனை நடிகர் ரஜினிகாந்த் வெளியிடுகிறார். இந்தி வெர்ஷனை நடிகர் ஆமீர்கானும், தெலுங்கு வெர்ஷனை இயக்குநர் ராஜமவுலியும், கன்னட வெர்ஷனை கிச்சா சுதீப், மலையாள வெர்ஷனை மோகன்லாலும் வெளியிட உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘இந்த சீனெல்லாம் வேணாம்.. ஒத்தபைசா பாக்கி இல்லாம திருப்பிக் கொடுக்கணும்’: சமுத்திரக்கனி எச்சரிக்கை

Pagetamil

‘ஞானவேல்ராஜாவின் பின்னால் சிவகுமார் குடும்பம்’: கரு.பழனியப்பன்

Pagetamil

‘பருத்திவீரன்’ பட சர்ச்சை: வருத்தம் தெரிவித்தார் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா

Pagetamil

‘என் போன்றோரையும் அவமதிக்கும் செயல்’: அமீர் விவகாரத்தில் ஞானவேலுக்கு பாரதிராஜா கண்டனம்

Pagetamil

2 பெண் குழந்தைகளை தத்தெடுக்கிறார் சமந்தா?

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!