தற்போதைய இலங்கை கிரிக்கெட் அணி சர்வதேச தர ஆட்டங்களிற்கு தகுதியற்றது என்பதை மீண்டும் ஒரு மோசமான தோல்வி மூலம் நிரூபித்துள்ளது.
இன்றைய உலகக்கிண்ண தகுதிச்சுற்று ஆட்டத்தில் இலங்கை அணி வெறும் 55 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து 302 ஓட்டங்களால் படுதோல்வியடைந்தது.
முன்னதாக நாணயச்சுழற்சியில் வென்று இலங்கை களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் ஆடிய இந்தியா, 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 357 ஓட்டங்களை பெற்றது.
சுப்மன் கில் 92, விராட் கோலி 88, ஸ்ரேயாஸ் ஐயர் 82 ஓட்டங்களை குவித்தனர்.
டில்சான் மதுசங்க 80 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டை வீழ்த்தினார்.
358 என்ற வெற்றியிலக்கை விரட்டிய இலங்கை 19.4 ஓவர்கள் முடிவில் வெறும் 55 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து, 302 ஓட்டங்களால் படுதோல்வியடைந்தது.
அதிகபட்சமாக பந்துவீச்சாளர்கள் கசுன் ராஜித 14, மஹீஸ் தீக்சன 12, அஞ்சலோ மத்தியூஸ் 12 ஓட்டங்களை பெற்றனர். அடுத்த அதிக ஓட்டம் உதிரிகள். அந்தவகையில் 10 ஓட்டங்கள் கிடைத்தது.
பந்துவீச்சில் மொஹமட் சமி 5, மொஹமட் சிராஜ் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.