மல்வத்தை பீடத்தின் மகாநாயக்கர் ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் தலைமையிலான அநுநாயக்கா சங்க உறுப்பினர்கள் முன்னிலையில் பிடிடுவே சிறிதம்ம தேரர், திரிபிடக போதனைகளையும், புத்தரின் குணாதிசயங்களையும் திரிபுபடுத்தும் பிரசங்கங்களை இனிவரும் காலங்களில் மேற்கொள்ள மாட்டேன் என உறுதியளித்துள்ளார்.
மல்வத்த பீடத்தின் மகாநாயக்கர் தலைமையிலான சங்க உறுப்பினர்களிடம் மன்னிப்புக் கோருவது இது இரண்டாவது தடவையாகும்.
மல்வத்தை மகாநாயக்கர் தலைமையிலான விஞ்சத்வர்க்கக் குழுவின் முன்னிலையில், ‘பரணி ஆசை அழுத் சண்டக்’ என்ற நூலில் இடம்பெற்றுள்ள உண்மைகளை விளக்கிய போது, சுஜாதா சிது தேவி மற்றும் சித்தார்த்த போசத் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை தவறுதலாக வெளியிட்டதாகவும் இது ஒரு வேண்டுமென்றே அவமதிக்கும் நோக்கம் அல்ல எனவும் பிட்டிடுவே சிறிதம்ம தேரர் தெரிவித்துள்ளார்.
செய்த தவறுகளுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டதன் பின்னர் மல்வத்த பீடத்தின் மகாநாயக்கர் தலைமையிலான சங்க குழுவினர் வழங்கிய அறிவுறுத்தல்கள் மற்றும் விதிமுறைகளுக்கு அமைவாக செயற்படுவதாக சிறிதம்ம தேரர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
பிட்டிடுவே சிறிதம்ம தேரரின் கருத்துக்கள் மற்றும் மன்னிப்புகளை ஏற்றுக்கொண்ட சங்க சபை இரண்டாவது தடவையாக அவருக்கு மன்னிப்பு வழங்க தீர்மானித்துள்ளதாக பஹமுனே சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான தவறை மீண்டும் செய்தால் மன்னிப்பு வழங்கப்பட மாட்டாது எனவும் தெரிவித்துள்ளார்.
சபை எடுக்கும் எந்தவொரு தீர்மானத்திற்கும் உடன்படுவதாக மல்வத்த தேரருக்கு கையொப்பமிட்ட கடிதம் ஒன்றையும் சிறிதம்ம தேரர் வழங்கியுள்ளார்.