வேற்று மதத்தைச் சேர்ந்த வாலிபரை காதலித்ததற்காக ஒருவர் தனது 14 வயது மகளை கொடூரமாக கொல்ல முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த அதிர்ச்சி சம்பவம் கேரளா மாநிலத்தின் ஆலுவாவில் நடந்துள்ளது.
மகளின் காதல் விவகாரத்தை அறிந்த தந்தை, அந்த உறவை முறித்துக்கொள்ளும்படி கூறியுள்ளார். இருப்பினும், மறுநாள், தந்தை தனது மகளிடம் இருந்து மொபைல் போனை மீட்டுள்ளார். இந்த கையடக்கத்தொலைபேசியை அந்த பெண்ணின் காதலன் கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து அந்த நபர் மகளை அடித்து உதைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆதாரங்களின்படி, தந்தை மகளை இரும்பு கம்பியால் கொடூரமாக அடித்து, வலுக்கட்டாயமாக வாயில் விஷத்தை ஊற்றினார். வாந்தி எடுக்கத் தொடங்கிய சிறுமியை தந்தையே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
தனது மகள் விஷம் கொண்ட பாட்டிலை வாயால் திறக்க முயன்றபோது தவறுதலாக விஷம் அருந்தியதாக மருத்துவர்களிடம் தெரிவித்தார்.
எனினும், தனது தந்தையால் விஷம் குடிக்க வற்புறுத்தியதாக சிறுமி பின்னர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ஆலுவா மேற்கு போலீசார் தந்தையை கைது செய்தனர். விரைவில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.
14 வயது சிறுமியின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.