25.5 C
Jaffna
December 1, 2023
இலங்கை

மீண்டும் ஆரம்பமானது 785/1 பேருந்து சேவை

காரைநகரிலிருந்து பயணத்தை தொடங்கி யாழ்ப்பாணம் சென்று மீண்டும் மதியம் 1.20 ற்கு யாழ்பாணத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்து காரைநகரை சென்றடையும் 785/1 பேருந்து சேவை இன்று ஆரம்பமானது

கடந்த காலங்களில் காரைநகர் – யாழ்ப்பாணம் பேருந்து சேவையின் ஒரு பகுதியாக காரைநகர்- மூளாய் பிள்ளையார் கோவிலடி – டச்சு வீதி ஊடாக சித்தன்கேணி யாழ்ப்பாணம் வீதி – வட்டுக்கோட்டை சந்தி – அராலி செட்டியார்மடம் ஊடாக யாழ்ப்பாணம் செல்லும் பேருந்து முன்னர் ஏற்பட்ட கொரோனா பேரிடர், பொருளாதார நெருக்கடி மற்றும் ஏனைய சில காரணங்களால் தனது பயணத்தை தொடர்வதில் சிரமங்களை எதிர்கொண்டு தடைப்பட்டது.

இதனால் மக்கள் பல சிரமங்களை எதிர்கொண்டனர்.

மேலும் டச்சு வீதியின் சேதங்கள் காரணமாகவும் பஸ் போக்குவரத்து செய்ய முடியாத நிலை சுட்டிக்காட்டப்பட்டது.

இதனையடுத்து கடந்த வாரம் டச்சு வீதி புனரமைக்கப்பட்டதோடு பஸ் போக்குவரத்தினை முன்னெடுப்பதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக இலங்கை போக்குவரத்து சபையின் யாழ் பிராந்திய நிலையத்துடனும் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டதன் பயனாக மீண்டும் இந்த பேருந்து சேவையை முன்னெடுக்க சாதகமான சமிஞ்சை கிடைத்ததால் மீண்டும் இன்று முதல் இச்சேவை ஆரம்பிக்கபட்டுள்ளதால் பேருந்தின் நேர அட்டவணையை பின்பற்றி பயனாளிகள் பயன் பெற முடியும்

குறிப்பாக பாடசாலை மாணவர்கள், வைத்திய சாலை செல்வோர், யாழ்ப்பாணம் செல்வோர் ஆகியோருக்கு இது மிகவும் பயனுடையதாக இருக்கும்.

மூளாய் டச்சு வீதி ஆரம்பம் முதல் சித்தன்கேணி டச்சு வீதி முடிவு வரையான வீதி பகுதியில் வாழும் மக்களின் போக்குவரத்து வசதியினை இலகுபடுத்துவதே இப் பேருந்து வழித்தடத்தின் பிரதான நோக்காகும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பேருந்து, முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றமில்லை!

Pagetamil

2வது நாளாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான போதகர் ஜெரோம் பெர்னாண்டோ!

Pagetamil

விபத்தில் ஒருவர் பலி

Pagetamil

மழை அதிகரிக்கும்!

Pagetamil

O/L பெறுபேறுகள் வெளியாகின!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!