26.6 C
Jaffna
December 9, 2024
Pagetamil
இலங்கை

நிதி முறைகேட்டு நடவடிக்கைகளால் இரண்டாம் மொழி கற்கையை பூர்த்தி செய்த உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை

கிளிநொச்சியில் அமைந்துள்ள தேசிய மொழிகள் பிரிவின் வடமாகாண நிலையத்தில்
இரணடாம் மொழியாக சிங்கள மொழி கற்கையினை பூர்த்தி செய்த வடக்கு
மாகாணத்தைச் சேர்ந்த சுமார் 50 உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ்கள் ஒரு
வருடத்தை கடந்தும் வழங்கவில்லை என பாதிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள்
தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் வடக்கு மாகாண பிரதம
செயலாளருக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளனர்.

இவ் விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

கடந்த 22.06.2022 அன்று கிளிநொச்சியில் நிலையத்தில் அரச
உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி் கற்கை நெறி ஆரம்பிக்கப்பட்டடு
14.09.2022 பூர்த்தி செய்யப்பட்டு உத்தியோகத்தர்களுக்கு வரவு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது. ஆனால் இக் கற்கை நெறியினை பூர்த்தி செய்தவர்களுக்கு ஒரு வருடம் கடந்தும் இன்று வரை அதற்கான சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக பயிற்சியை நிறைவு செய்த உத்தியோத்தர்கள் பதவி உயர்வுகளுக்கு விண்ணப்பிக்க முடியாதும், சம்பள உயர்வுகள் வழங்கப்படாதும் பாதிக்கப்படடுள்ளனர். இதற்கு பின்னனர் குறித்த நிலையத்தில் பயிற்சியினை நிறைவு செய்த உத்தியோகத்தர்களுக்கு அதற்கான
சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.

இருப்பினும் குறித்த ஒரு பிரிவு உத்தியோகத்தர்களுக்கு மட்டும் இதுவரை வழங்கப்படாதற்கு காரணம் இக் க ாலப்பகுதியில் இடம்பெற்ற பயிற்சி நெறியானனது ஒரு அரசசார்பற்ற நிறுவனத்தின் நிதி பங்களிப்பில் இடம்பெற்றுள்ளது. எனவே பயிற்சி நிறைவுக்கு பின்னர் தேசிய மொழிகள் பிரிவின் வடமாகாண நிலையத்தினரால் குறித்த அரசசார்பற்ற நிறுவனத்தில் பெற்ற நிதிக்கான முறையான கணக்கறிக்கைகள் கொழும்பில் உள்ள அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படாதன் காரணமாகவும் அது தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சைகள் காரணமாக இப் பிரிவில் கற்ற உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ் வழங்ப்படாதுள்ளமை தெரியவந்துள்ளது.

எனவே இது தொடர்பில் குறித்த நிலையத்தில் தற்போது பொறுப்பாகவுள்ள அதிகாரி
ஒருவரை தொடர்பு கொண்டு வினவிய போது தான் கடமைக்கு வந்து ஒன்றரை மாதங்கள்
என்றும் சான்றிதழ் வழங்கப்படாதுள்ள உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ்களை
வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது எனவும், நிதி பயன்பாடு தொடர்பில் உரிய ஆவணங்கள், அறிக்கைகள் சமர்பிக்கப்படாததன் காரணமாக சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்படவில்லை, இப்போது அந்த வேலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கணக்காய்வு இடம்பெறவுள்ளது. எனவே விரைவில் பயிற்சி பெற்ற உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பொலிஸ் சோதனைச்சாவடிகள் அகற்றப்பட்டதால் விபரீதமா?: அல்லைப்பிட்டியில் பெண்களுக்கு நேர்ந்த கதி!

Pagetamil

பேரன் பகிடியாக தள்ளியதால் 91 வயது மூதாட்டி உயிரிழப்பு: யாழில் சம்பவம்!

Pagetamil

கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலக செயலாளராக ஜெ. எஸ் அருள்ராஜ்

east pagetamil

கிளாலி மக்களுக்கான குடிநீர் இணைப்புக்கான நடமாடும் சேவை

Pagetamil

லொஹான் ரத்வத்த பிணையில் விடுதலை

Pagetamil

Leave a Comment