யாழ்ப்பாணத்திலுள்ள விடுதியொன்றில் சிறுமியொருவர் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் காதலனான இளைஞனும், விடுதி உரிமையாளரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் புறநகர் பகுதியை சேர்ந்த 14 வயதான பாடசாலை மாணவியும், குருநகர் பகுதியை சேர்ந்த 19 வயதான இளைஞனும் காதலித்து வந்துள்ளனர்.
சில மாதங்களின் முன்னர் கோயில் வீதியிலுள்ள பூங்கா என்ற பெயரில் இயங்கி வரும் இடமொன்றுக்கு அழைத்துச் சென்ற இளைஞன், அங்கு மாணவியை வல்லுறவுக்குள்ளாக்கியுள்ளார்.
இந்த நிலையில் சிறுமி கர்ப்பமாகியுள்ளார். இது தொடர்பில் யாழ்ப்பாண பொலிசார் விசாரணை மேற்கொண்டு, காதலனான 19 வயது இளைஞனையும், பூங்க உரிமையாளரான 65 வயதானவருரையும் கைதாது செய்தனர்.
அவர்கள் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
1
+1
+1