28 C
Jaffna
December 5, 2023
இலங்கை

பாதி சிகரெட்டுக்கு ஆசைப்பட்டவருக்கு நேர்ந்த கதி

கொழும்பு, பஸ்டன் மாவத்தையில் உள்ள பொதுக் கழிவறையை பயன்படுத்த வந்த பொலிஸ் கான்ஸ்டபிள், இனந்தெரியாத ஒருவர் கொடுத்த பாதி புகைத்த சிகரெட்டை புகைத்துவிட்டு போதையில் நினைவிழுந்துள்ளார்.

இந்த சமயத்தில், அவரது கழுத்திலிருந்த தங்க நகை மற்றும் கைத்தொலைபேசி  திருடப்பட்டுள்ளதாக புறக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சொத்துக்களின் பெறுமதி 432,000 ரூபா என பொலிஸ் கான்ஸ்டபிளின் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மிஹிந்தலை பிரதேசத்தை வசிப்பிடமாகவும், அனுராதபுரம், மதவாச்சி பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் இந்த பொலிஸ் கான்ஸ்டபிள் சட்டத்தரணி ஒருவரை சந்திப்பதற்காக கொழும்பு வந்துள்ளார்.

பஸ்டியன் மாவத்தையில் உள்ள பொதுக் கழிவறைக்குச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள், கழிவறைக்கு அருகில் நின்ற இனந்தெரியாத ஒருவர் கொடுத்த பாதி புகைத்த சிகரெட்டை உட்கொண்டு போதையில் இருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வெளிநாடு செல்ல விடுமுறை எடுத்தாலும் இலங்கையில் வேறு வேலை பார்க்கும் பல்கலைக்கழக ஆசிரியர்கள்!

Pagetamil

வடமாகாணத்தில் ரூ.50 இலட்சம் பெறுமதியான வீட்டுத் திட்டத்துக்கு விண்ணப்பிக்காதவர்களுக்கான அறிவிப்பு!

Pagetamil

புதுமுறிப்பு குளத்திலிருந்து மீன்கள் வெளியேறாமல் தடுப்பு வலை

Pagetamil

ஷானி அபேசேகரவை வாகன விபத்தில் கொலை செய்ய சதித்திட்டம்!

Pagetamil

காசாவில் வந்தால் இரத்தம்… தமிழர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?: இலங்கை முஸ்லிம்களிம் கேட்கிறார் சபா.குகதாஸ்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!