26.2 C
Jaffna
November 29, 2023
முக்கியச் செய்திகள்

வரவு செலவு திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு!

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அனைத்து அரச ஊழியர்களின் சம்பளத்தையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (30) அமைச்சரவையில் தெரிவித்தார்.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புடன் தனியார் துறையினருக்கும் சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

அரசாங்கம் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதை அறிந்து மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட சில குழுக்கள் தமது அழுத்தம் காரணமாக இவ்வாறு சம்பளம் அதிகரிக்கப்படுவதாக கூற முற்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.

பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகும் நிலைமையில் உழைக்கும் மக்களின் சம்பளத்தை அதிகரிப்பதே தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையாகும் என ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மூன்றாவது வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 13ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த வரவு செலவுத் திட்டத்தின் மூலம் சம்பளம் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதியினால் நேற்று அறிவிக்கப்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தரவை துயிலுமில்ல ஏற்பாட்டுக்குழுவினர் 4 பேர் கைது

Pagetamil

விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்கவை பதவிநீக்கிய ரணில்!

Pagetamil

எனது உயிருக்கு ஏதும் நிகழ்ந்தால் ரணிலும், சாகலவுமே பொறுப்பு: விளையாட்டு அமைச்சர்!

Pagetamil

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியில் இதுவரை 35 மனித எலும்புக்கூடுகள் மீட்பு!

Pagetamil

இஸ்ரேல்- ஹமாஸ் கைதிகள் பரிமாற்றம்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!