நாங்கள் வந்தேறிகள் அல்ல. இந்த மண்ணிண் மைந்தர்களே எனக் குறிப்பிட்டு வடக்கிலிருந்து விரட்டப்பட்ட 33 ஆம் ஆண்டு நினைவுநாள் முஸ்லீம் மக்களால் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
கடந்த 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி திமீழ விடுதலைப் புலிகளால் வடக்கு மாகாணத்தில் இருந்து முஸ்லீம் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
இங்கிருந்து தாம் வெளியேற்றப்பட்ட 33 ஆம் ஆண்டை நினைவுகூரும் வகையில் முஸ்லிம் மக்கள் அதிகம் வாழுகின்ற யாழ் நகரை அண்மித்த ஐந்து சந்திப் பகுதிகள் முழுவதும் கறுப்புக் கொடிகள் பறக்க விடப்பட்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.
யாழ்ப்பாண அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் யாழ் பெரிய மொகதீன் ஜிம்மா பள்ளி வாசலில் இதனை நினைவுகூரும் நிகழ்வும் தமது பிரச்சனைகள் தேவைகளை வெளிப்படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பையும் நடாத்தியிருந்தனர்.
இதன் போது பள்ளி வாசல்களின் பிரதிநிதிகள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு இந்த நாளை நினைவுபடுத்தும் வகையில் தென்னை மரக்கன்றுகளை நாட்டி வைத்தனர்.
மேலும் இந்த மண்ணிலிருந்து விரட்டப்பட்டு தாம் மீளவும் வந்திருக்கின்ற நிலைமையில் தம்மை எவரும் கண்டு கொள்வதில்லை என கவலை தெரிவித்துள்ள முஸ்லீம் மக்கள் சகல வசதிகளையும், உரிமைகளையும் பெற்று தாமும் சுதந்திரமாக வாழுகின்ற நிலைமையை ஏற்படுத்த அனைவரதும் உதவிகளுடன் ஒற்றுமையாக ஒருமித்து செயற்பட வேண்டுமென கேட்டுக் கொண்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1