மதுபோதையில் வாகனம் செலுத்தி இரண்டு வாகனங்களுக்கு சேதம் விளைவித்த குற்றத்திற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவின் பிணை விண்ணப்பம் கல்கிசை மேலதிக நீதவான் சஞ்சய எல்.எம்.விஜேசிங்கவினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
விஷேட பிரேரணையின் ஊடாக பிணை விண்ணப்பத்தை அவர் சமர்ப்பித்தார்.
ஞாயிற்றுக்கிழமை (29) அதிகாலை 1.20 மணியளவில் வெள்ளவத்தை முஹுது மாவத்தையில் உள்ள ஹோட்டல் ஒன்றின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு வாகனங்களுக்கு சேதம் விளைவித்த ஓய்வு பெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வெள்ளவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். விபத்தின் போது அவர் மது போதையில் இருந்ததாக பரிசோதனையில் தெரியவந்தது
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1