28 C
Jaffna
December 5, 2023
இலங்கை

முல்லைத்தீவில் பெரியப்பாவை அடித்துக் கொன்ற இராணுவச்சிப்பாய்!

முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பில் தனது பெரியப்பாவை அடித்துக் கொன்ற இளைஞன் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயில்குஞ்சன் குடியிருப்பில் நேற்று (28) மாலை இந்த சம்பவம் நடந்தது.

சம்பவம் நடந்தபோது இருவரும் மதுபோதையில் இருந்துள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞன், இராணுவத்தில் பணியாற்றுகிறார்.

உயிரிழந்தவர் 68 வயதானவர்.

இரு குடும்பத்துக்குமிடையில் சில காலமாக பகை நிலவி வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை, இளைஞன் மதுபோதையில் பெரியப்பாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சற்று நேரத்தின் பின் இளைஞனின் வீடு தேடி சென்ற பெரியப்பா தகராறில் ஈடுபட்டுள்ளார். இருவரும் மாறிமாறி தாக்கியுள்ளனர்.

இளைஞன் மண்வெட்டி பிடியினால் பெரியப்பாவை தாக்கியதில் அவர் தலையில் படுகாயமடைந்தார். உடனடியாக புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இராணுவத்தில் பணியாற்றும் இளைஞனும், பெரியப்பாவின் தாக்குதலில் காயமடைந்துள்ளார். அவர், பொலிசாரால் கைது செய்யப்பட்டு, பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வடமாகாணத்தில் ரூ.50 இலட்சம் பெறுமதியான வீட்டுத் திட்டத்துக்கு விண்ணப்பிக்காதவர்களுக்கான அறிவிப்பு!

Pagetamil

புதுமுறிப்பு குளத்திலிருந்து மீன்கள் வெளியேறாமல் தடுப்பு வலை

Pagetamil

ஷானி அபேசேகரவை வாகன விபத்தில் கொலை செய்ய சதித்திட்டம்!

Pagetamil

காசாவில் வந்தால் இரத்தம்… தமிழர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?: இலங்கை முஸ்லிம்களிம் கேட்கிறார் சபா.குகதாஸ்!

Pagetamil

வவுனியாவில் கொடூரமாக தாக்கிய ஆசிரியர்: உயர்தர மாணவி தப்பியோட்டம்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!