குடிபோதையில் வாகனம் செலுத்தி இரண்டு வாகனங்களுக்கு விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவை எதிர்வரும் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (29) உத்தரவிடப்பட்டுள்ளது.
பம்பலப்பிட்டியிலிருந்து தெஹிவளை நோக்கிச் சென்ற முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஓட்டிச் சென்ற கார், வெள்ளவத்தை மரைன் ட்ரைவ் பகுதியில் உள்ள மிராஜ் ஹோட்டலுக்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த காரையும் பஸ்ஸையும் சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளது.
பரிசோதனையின் போது முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் குடிபோதையில் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டதாக வெள்ளவத்தை பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1