26.2 C
Jaffna
November 29, 2023
இலங்கை

கஞ்சாவுடன் இருவர் கைது!

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 104 கிலோ எடையுடைய கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் இருவரும் வட்டுக்கோட்டை வீதியூடாக வாகனத்தில் கஞ்சாவினை எடுத்துச் செல்லும் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவர் மாதகல் பகுதியையும் மற்றையவர் யாழ்ப்பாண பகுதியையும் சேர்ந்தவர்கள் என அறியமுடிகிறது.

சந்தேகநபர்கள் இருவரும் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இருவரையும் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழ் யுவதி கடத்தப்பட்டு வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொலை: மரண தண்டனை விதிக்கப்பட்ட 2 இராணுவத்தினர் விடுதலை!

Pagetamil

மஹிந்த பயணித்த வாகனத்தின் மீது விழுந்த வீதித்தடுப்பு!

Pagetamil

இன்றைய வானிலை

Pagetamil

பிரதான வீதிக்குள்ளும் நீளும் மனிதப் புதைகுழி: நாளை முக்கிய கலந்துரையாடல்!

Pagetamil

வவுனியாவின் குடிப்பரம்பலை சீர்குலைக்கும் முயற்சியில் அரசு ஈடுபடுகிறது!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!