25.5 C
Jaffna
December 1, 2023
இலங்கை

கடளுக்கு காட்டிய தீபத்தில் பறந்த பொறி: புறக்கோட்டை தீ விபத்தில் 23 பேர் காயம்!

கொழும்பு – புறக்கோட்டை இரண்டாம் குறுக்குத் தெருவில் உள்ள புடைவைக் கடை ஒன்றில் நேற்று (27) காலை ஏற்பட்ட தீ விபத்தில் 23 பேர் காயமடைந்துள்ளனர்.

தீ விபத்தில் காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டவர்களில் 6 பேர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

காலை 9.30 மணி அளவில் இரண்டாவது குறுக்குத் தெருவில் உள்ள வர்த்தக நிலையத்தில் புடைவை விற்பனை செய்து கொண்டிருந்த போது தீ விபத்து ஏற்பட்டது.

வியாபார நடவடிக்கைகளுக்காக கடையை திறப்பதற்கு முன்னர் வியாபாரி ஒருவர் தீபம் ஏற்றி மத அனுஷ்டானங்களைச் செய்து கொண்டிருந்த போது புடவையில் தீப்பொறி பறந்து, தீ பரவியதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கீழ் தளத்தில் ஏற்பட்ட தீ ஆறு மாடி கட்டிடத்தின் மேல் தளம் வரை பரவி அங்கிருந்த கடைகள் அனைத்தும் நாசமாகியுள்ளதாக கொழும்பு கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு தீயணைப்பு பிரிவின் 13 தீயணைப்பு வாகனங்கள் 43 தீயணைப்பு உத்தியோகத்தர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு அணைக்கப்பட்டது.

தீப்பிடித்த கட்டிடத்தில் உள்ள துணிக்கடையை ஒட்டியிருந்த மேலும் பல கடைகளும் தீயில் பலத்த சேதமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தீ விபத்து ஏற்பட்ட கடையுடன் வணிக வளாகம் வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்களால் நிரம்பியிருந்த சமயத்தில் தீ பரவியதன் விளைவாக, அவர்கள் கீழே வரமுடியாமல் மேல் தளங்களில் சிக்கியிருந்தனர். சிலர் மேல் மாடியிருந்து கீழே குதித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு, சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி மேல் தளங்களில் சிக்கியிருந்தவர்களை பாதுகாப்பாக கீழே கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் காயமடைந்தவர்கள் 18 முதல் 25 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்ததன் மூலம் மேலும் சிக்கல்கள் தடுக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் இந்திக ஜாகொட தெரிவித்தார். குறைக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புறக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பேருந்து, முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றமில்லை!

Pagetamil

2வது நாளாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான போதகர் ஜெரோம் பெர்னாண்டோ!

Pagetamil

விபத்தில் ஒருவர் பலி

Pagetamil

மழை அதிகரிக்கும்!

Pagetamil

O/L பெறுபேறுகள் வெளியாகின!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!