27.8 C
Jaffna
October 7, 2024
Pagetamil
இலங்கை

உணவுப்பார்சலில் புழு, பிரபல சைவ உணவகத்துக்கு சீல்!

யாழ் நகர் ஆரியகுளம் சந்தி பகுதியில் அமைந்துள்ள பிரபல சைவ உணவகத்தில் வாடிக்கையாளர் ஒருவரிற்கு புழுவுடன் உணவு வழங்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து குறித்த பொதுமகன் யாழ் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரிற்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து அன்றையதினமே மாநகர சுகாதார பிரிவினரால் குறித்த உணவகம் பரிசோதிக்கப்பட்டது.

நேற்று முன்தினம் (26) மீண்டும் யாழ்நகர பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் தலைமையிலான குழுவினரால் குறித்த உணவகம் பரிசோதனை செய்யப்பட்டது.

இதன்போது சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகள் எவையும் நிவர்த்தி செய்யப்படாமலே காணப்பட்டது. அத்துடன் உரிய அனுமதி பெறப்படாமல் இயங்கிய மற்றோர் உணவகமும் பரிசோதிக்கப்பட்டது.

தொடர்ந்து 02 உணவகங்களிற்கும் எதிராக நேற்று (27) மேலதிக நீதவான் நீதிமன்றில் தனித்தனியாக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது.

வழக்குகளினை விசாரித்த நீதவான் இரண்டு உணவகங்களையும் சீல் வைத்து மூடுமாறு பொது சுகாதார பரிசோதகரிற்கு உத்தரவிட்டார். இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் குறித்த இரு உணவகங்களும் சீல் வைத்து மூடப்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இலங்கை தமிழ் அரசு கட்சியிலிருந்து விலகுகிறார் சசிகலா: யாழில் தேர்தலில் களமிறங்குகிறார்!

Pagetamil

சாள்ஸ் நிர்மலநாதன் மீண்டும் தேர்தலில் போட்டி!

Pagetamil

தமிழ் அரசு கட்சியிலிருந்து விலகுகிறார் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா!

Pagetamil

ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டு வைக்கும் சமத்துவக்கட்சி

Pagetamil

இலங்கை தமிழ் அரசு கட்சியின் யாழ் மாவட்ட வேட்பாளர் பட்டியல்: மிகப்பலவீனமானதென விமர்சனம்!

Pagetamil

Leave a Comment