மல்வானை, வடுவேகம, பொல்ஹேன வீதி பகுதியில் உள்ள விடுதி அறையில் தங்கியிருந்த 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை பியகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமி வீட்டில் இருந்த போது அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், அவரும் மாமாவும் சேர்ந்து சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
அதன்படி காதலன் மற்றும் மாமாவை கைது செய்வதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
மாணவி தனது காதலனுடன் கடந்த மாதம் 5ஆம் திகதி வடுவேகம, பொல்ஹேன வீதி பகுதியிலுள்ள விடுதியொன்றுக்கு இரகசியமாக வந்து தங்கியிருந்ததாகவும், பின்னர் காதலன் கோபித்துக் கொண்டதையடுத்து, அங்கு மற்றொரு அறையில் தங்கியிருந்த காதலனின் மாமாவுடன் சிறுமி தங்கியிருந்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
சிறுமியை காணவில்லை என சிறுமியின் பெற்றோர் பண்டாரவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
சிறுமி தற்போது மருத்துவ பரிசோதனைக்காக ராகம பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபரின் தந்தையை மஹர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.