27.6 C
Jaffna
November 29, 2023
இலங்கை

மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக யாழில் தீப்பந்த ஊர்வலம்

மின்கட்டண அதிகரிப்பிற்கு எதிராக யாழில் தீப்பந்த ஊர்வலம் நடத்தப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் அக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் தலைமையில் நேற்று இரவு இப் போராட்டம் நடைபெற்றது.

யாழ் நல்லூர் பகுதியிலுள்ள அக் கட்சியின் அலுவலகத்தில் ஆரம்பிக்கப்பட்ட தீப்பந்த ஊர்வல பேரணியானது இளங்கதிர் சனசமூக நிலையம் வரை சென்று நிறைவு பெற்றது.

இப் போராட்டத்தில் கட்சியின் அமைப்பாளர்கள், கட்சிப் பிரதிநிதிகள் ஆதரவாளர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை தற்போதைய அரசாங்கத்தின் மின்சார அதிகரிப்பிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இப் போராட்டத்தின் தொடராக யாழிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சர்வதேச மனக்கணித போட்டிக்கு யாழில் இருந்து 19 மாணவர்கள்

Pagetamil

காங்கேசன்துறையில் துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான சொத்துக்களை சேதப்படுத்தி, தொடரும் இரும்பு திருட்டு

Pagetamil

ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தலை கண்டிக்கிறது யாழ் ஊடக அமையம்!

Pagetamil

யாழ் யுவதி கடத்தப்பட்டு வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொலை: மரண தண்டனை விதிக்கப்பட்ட 2 இராணுவத்தினர் விடுதலை!

Pagetamil

மஹிந்த பயணித்த வாகனத்தின் மீது விழுந்த வீதித்தடுப்பு!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!