பொது மக்களின் காணிகளை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக கட்டப்பட்ட ஐனாதிபதி மாளிகை கட்டடத்தை உரிய நடைமுறைகள் அனுமதிகள் பெறப்படாது எவ்வாறு தனியாருக்கு வழங்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஐனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், ஐனாதிபதியின் இந்தச் செயற்பாடு முழுக்க முழுக்க தவறு என்றார் .
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற போதே இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது நகர அபிவிருத்தி அதிகார சபையின் விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது. சமயத்தில் கருத்து தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன், யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு கீரிமலையில் கட்டப்பட்டுள்ள ஐனாதிபதி மாளிகை உரியமுறையில் அனுமதிகள் நடைமுறைகள் பின்பற்றப்படாது கட்டப்பட்டுள்ளது.
குறித்த காணிகள் பொது மக்களுக்கு சொந்தமாகவும் உள்ளது அவ்வாறான நிலையில் பொதுமக்களுக்கு அறிவிக்காது காணிகளை அடையாளம் காணாது , எவ்வாறு கையகப்படுத்த முடியும் முறையாக காணிகள் அளவிடுகள் செய்யப்படவில்லை அவ்வாறன நிலையில் எவ்வாறு தனியாருக்கு ஐனாதிபதி மாளிகை எனக் கூறப்படும் கட்டடத்தை வழங்கமுடியும் என்றார்.
இதேவேளை குறித்த விடயம் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள அதேவேளை புலம்பெயர் முதலிட்டாளர்கள் மத்தியிலும் தவறான புரிதல் ஏற்பட்டுவிடும் இவைதொடர்பில் கூடியகவனம் செலுத்தப்பட வேண்டும் என்றார்.
மேலும் வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி விகே சிவஞானம் வடக்கு மாகாணசபை அமர்வுகள் இடம்பெற்ற காலத்திலேயே இக்கட்டடம் வடக்கு மாகாண சபைக்கு கையளிக்கப்பட வேண்டும் என்று ஏக மனதான தீர்மானம் எடுக்கப்பட்டு அவை உரிய இடங்களுக்கு அனுப்பிவைக்கப்படுள்ளமை யாவரும் அறிந்த்தே. அதேநேரம் மாகாண சபைக்கு வழங்காவிட்டாலும் யாழ் பல்கலைக்கு இதனை வழங்க கேரியிருந்தோம். ஆனாலும் இவை எவையும் பின்பற்றப்படவில்லை என்றார்.
மேலும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவிற்கு தெரிவிக்காது, அறிவிக்காது எவ்வாறு இதனை நடைமுறைப்படுத்த முடியும் என அங்கைன் இராமநாதன் உள்ளிட்ட எனைய உறுப்பினர்களாலும் இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும் இவ் விடயம் தொடர்பில் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் அமைச்சருமான
டக்ளஸ் தேவானந்தா, குறித்த விடயம் அரசல் புரசலாக இடம்பெற்றுள்ளமை போல் உள்ளதால் இதனை பார்வையிட்டு ஐனாதிபதியுடன் கலந்துரையாடி முடிவுகளை அறிவிப்போம். இது சம்பந்தமாக ஆராய விசேட கூட்டமொன்றையும் கூட்டுவோம் என்றார்.
இக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், அங்கஜன் இராமநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வடக்கு மாகாண அவைத் தலைவர்சீ.வீ.கே.சிவஞானம் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்ததுடன் பொலிஸ் அதிகாரிகள், அரச திணைக்களத் தலைவர்களும் மற்றும் அதிகாரிகள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.