சிலாபத்தில் உள்ள பல்பொருள் அங்காடியில் பௌத்த பிக்குவை, ஒருவர் தாக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. காணொளியில் உள்ள புத்த பிக்கு சிலாபம் கரவிடகர விகாரையில் தங்கியிருந்த கரவிடகரே தம்மகித்தி தேரர். அவர் இத்தாலியில் ஒரு விகாரையில் வசிக்கிறார்.
இந்த தாக்குதல் ஒக்டோபர் 21ஆம் திகதி பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றதாக பிக்கு சிலாபம் பொலிஸில் செய்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிக்குவிடம் இருந்த பையொன்றை சந்தேக நபர் எடுத்துச் செல்வது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. அந்தப் பையில் யூரோ நோட்டுகள் மற்றும் இலங்கை ரூபாய் ரூ.4.8 மில்லியன் இருந்துள்ளது.
இந்த பணத்தை இத்தாலிக்கு அனுப்புவதற்காக வேறு ஒருவருக்கு வழங்குவதற்காக பிக்கு கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அவர் நேற்று (23) இத்தாலி திரும்பவிருந்தார். சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.