யாழ்ப்பாணத்தில் வர்த்தக செயற்பாட்டை ஆரம்பித்துள்ள சீன நிறுவனம்

Date:

கடந்த சில காலமாக சீனாவின் செயற்பாடுகள் தெற்கை நோக்கியதாக இருந்த நிலையில் தற்போது வடக்கிலும் தனது செயற்பாட்டை மெல்ல ஆரம்பித்துள்ளது.

இந்த மாத ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் சைனோபெக் நிறுவனம் பெற்ரோல் விநியோகத்தை ஆரம்பித்த நிலையில் இன்று செவ்வாய்கிழமை மானிப்பாய் மெமோறியல் வீதியில் சைனோபெக் ஒயில் வகைகளை அறிமுகம் செய்து விநியோக முகவரை அறிமுகப்படுத்தியுள்ளது.

சைனோபெக் ஒயில் நிறுவனத்தின் இலங்கையின் ஏக விநியோகஸ்தரான இன்டர்நஷனல் லுப்ரிக்கட் பிறைவட்லிமிட்டட் நிறுவனமானது யாழ்ப்பாணத்திற்கான தனது யாழ்.விநியோகஸ்தராக கோல்ட் மவுன்ட் பிறதர்ஸ் பிறைவட் லிமிட்டட் என்னும் நிறுவனத்தினை இன்று செவ்வாய் கிழமை மானிப்பாயில் ஆரம்பித்துள்ளது.

இந்நிகழ்வில் பங்குதாரர்களான பிரதான நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜயசாந்த தொட்டஹேவகே, தேசிய விற்பனை முகாமையாளராக துசிதகுமார,விற்பனை முகாமையாளர் எம்.குகன் விருந்தினர்களாக கலந்து கொண்டதுடன் சைனோபெக் எரிபொருள் விற்பனை முகாமையாளர்கள் வாகன திருத்துநர்கள் வாகன உதிரிப்பாக விற்பனையாளர்கள் பொது மக்கள் கலந்துகொண்டனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ரசிக வெறியால் வந்த வினை: தமிழக தேர்தலில் கள்ள வாக்கிட்ட இலங்கைத் தமிழர்கள் பலர் கைது!

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற்று முடிந்துள்​ளது. எப்​போதும் இல்​லாத வகை​யில் இந்​த​முறை...

யாழில் மின்னல் தாக்கி இளைஞன் பலி

யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியில் நேற்று (14) மின்னல் தாக்கி இளைஞர்...

உக்ரைனின் ட்ரோன்கள் அத்துமீறியதால் கவிழ்ந்த ஆட்சி: லாட்வியாவில் நடப்பது என்ன?

பால்டிக் நாடான லாட்வியாவிற்குள் அத்துமீறி நுழைந்த உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் தொடர்பான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்