எஹலியகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பரிசோதகர் பிரியங்கர சில்வா தனது துப்பாக்கியால் தலையில் சுட்டு தற்கொலை செய்துகொண்டமைக்கான காரணம் அவரது கையடக்க தொலைபேசி பதிவுகளை ஆராய்ந்ததில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாட்ஸ்அப் மூலம் பிரியங்கர சில்வா அனுப்பிய பல செய்திகள், அவர் தற்கொலை செய்து கொள்ள இருப்பதாகக் கூறி அவரது தொலைபேசியில் காணப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
பிரியங்கர சில்வா, தற்கொலை செய்துகொண்ட போது, வீடியோ அழைப்பு மூலம் வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகம் எழுந்துள்ளது.
அதனை உறுதிப்படுத்தும் வகையில் தொலைபேசி பரிசோதனைக்கு அனுப்பப்படும் என பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த பொலிஸ் பரிசோதகர் வாட்ஸ்அப் ஊடாக அடிக்கடி ஒருவருக்கு அழைப்பு விடுத்து அந்த வாட்ஸ்அப் இலக்கத்திற்கு தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக செய்திகளை அனுப்பியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இரத்தினக்கல் தொடர்பான வியாபார உரிமையாளரின் குடும்ப உறுப்பினரான ஆண் அல்லது பெண் நபருக்கு இவ்வாறான அழைப்புகள் வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஒக்டோபர் 20 ஆம் திகதி இரவு, பிரியங்கர சில்வா தனது கடமை துப்பாக்கியையும் ஐந்து தோட்டாக்களையும் எடுத்துச் சென்றுள்ளார்.
அவர் சுடப்பட்ட இடத்தில் நான்கு தோட்டாக்கள் கிடந்தன. ஒரே ஒரு தோட்டாதான் அவரது உடலில் புகுந்தது.
பிரியங்கர சில்வா தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொள்வதாக பாவனை செய்து, துப்பாக்கியைத் தலையில் வைத்துக்கொண்டு தவறுதலாக தன்னைத் தானே சுட்டுக் கொண்டாரா என்ற சந்தேகமும் சில பொலிஸ் உத்தியோகத்தர்களிடையே எழுந்துள்ளது.