ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலுக்குள் நுழைந்து நடத்திய திகைப்பூட்டும் தாக்குதல் தொடர்பில், இஸ்ரேல் முன்கூட்டியே எச்சரிக்கப்பட்டிருந்தது என்ற தகவல் ஏற்கனவே வெளியாகியிருந்தது.
இந்த நிலையில், முன்கூட்டிய உளவுத் தகவல்களின் அடிப்படையில், தாக்குதல் நடப்பதற்கு 2 மணித்தியாலங்களின் முன்னதாக இஸ்ரேல் பாதுகாப்பு அதிகாரிகள் கூடி, இந்த விவகாரத்தை ஆராய்ந்த மற்றொரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சனல் 12 தொலைக்காட்சி இந்த தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது.
ஒக்டோபர் 7, சனிக்கிழமை காலை ஹமாஸின் பேரழிவுகரமான தாக்குதலுக்கு இரண்டு மணித்தியாலங்களிற்கு சற்ற முன்னதாக இஸ்ரேலின் பாதுகாப்புத் தலைவர்கள் தெளிவற்ற சமிக்ஞைகளை பெற்றிருந்தன் அடிப்படையில், பாதுகாப்பு கூட்டத்தை நடத்தியதாக தெரிவித்துள்ளது.
ஒக்டோபர் 7 அன்று நடந்த அளவான பேரழிவு மதிப்பீட்டை அவர்கள் பெற்ற உளவுத்தகவல்கள் வழங்கியிருக்கவில்லை. தாக்குதல் நடக்கப் போகிறது என்ற அளவில் மட்டுமே தகவலை பெற்றுள்ளனர். அதை சிறியளவலான தாக்குதல் என இஸ்ரேலிய பாதுகாப்புத்துறை கணக்கிட்டுள்ளது.
எனினும், இந்த தாக்குதலில் 1,400 பேர் கொல்லப்பட்டனர்.
கிடைத்த உளவுத்தகவல்களின்படி, அன்று பாலஸ்தீன போராளிகள் இஸ்ரேலிய எல்லைக்குள் ஊடுருவ முயற்சிப்பார்கள், ஒன்று அல்லது இரண்டு சமூகங்களின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றும் மற்றும்/அல்லது கடத்தல்களுக்கு முயற்சிக்கும் என்ற தகவல் கிடைத்துள்ளது.
இஸ்ரேல் இராணுவத் தளபதி ஹெர்சி ஹலேவி உட்பட மூத்த இராணுவம் தளபதிகள் மற்றும் இஸ்ரேல் உள்நாட்டு பாதுகாப்பு சேவை அதிகாரிகள் கூட்டத்தில் இந்த அறிகுறிகள் விவாதிக்கப்பட்டன. ஆனால் எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
தாக்குதல் ஒக்டோபர் 7 காலை 6:29 மணிக்கு தொடங்கியது. ஆனால், காலை 4 மணியளவில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது என தொலைக்காட்சி அறிக்கை கூறுகிறது.
இந்த கூட்டத்தை தொடர்ந்து சிறிய இராணுவ அணியொன்று எல்லைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
என்றாலும், இஸ்ரேல் எதிர்பார்த்ததைவிட பெருமெடுப்பில் தாக்கதல் நடந்தது. ஹமாஸ் பல இடங்களில் எல்லையில் ஊடுருவி, 22 சமூகங்களில் இஸ்ரேலியர்களை கொன்று குவித்தது. ஒரு வெளிப்புற இசை விழாவில் ஹமாஸ் தாக்குதல் நடத்தியபோது, இஸ்ரேல் அனுப்பிய சிறிய அணி சண்டையில் ஈடுபட்டு, பெரும்பாலும் அழிந்தது.
பாதுகாப்புத் தலைவர்கள் உடனடித் தாக்குதல் பற்றிய தெளிவற்றை அறிகுறிகளை கீழ் மட்டங்களுக்கு தெரிவிக்கவில்லை. எல்லையில் உள்ள துருப்புக்களை எச்சரிக்கவில்லை, அவர்களில் பலர் தங்கள் தளங்களிலும் நிலைகளிலும் கொல்லப்பட்டனர், அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த டாங்கிகளை நகர்த்தவில்லை, மேலும் சில மணி நேரங்களுக்குப் பிறகும் போராளிகளுடன் சண்டையிட்ட அருகிலுள்ள சமூகங்களின் உள்ளூர் சிவில் பாதுகாப்புப் படைகளை எச்சரிக்கவில்லை என்று அறிக்கை கூறுகிறது.